#thanthitv #pmk #electioncampaign #loksabhaelection2024
மண் மீது சத்தியம் செய்து வாக்கு சேகரித்த...பாமக வேட்பாளர் திலகபாமா
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்றைய தினம் ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தயம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து அவர் பிரச்சாரம் செய்தார். குறிப்பாக கல்லுப்பட்டியில் விவசாய நிலத்தில் இறங்கி வேலை பார்த்து பரப்புரை மேற்கொண்டார். மேலும், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த பெண்களின் கோரிக்கையை கேட்டறிந்த வேட்பாளர் திலகபாமா, விவசாய மண் மீது சத்தியம் செய்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்