"அந்த ஒரு இடத்துக்காக அதிமுக - பாஜக போடும் போட்டி" - கலாய்க்கும் கனிமொழி
தேர்தல் களத்தில் திமுக, அதிமுக இடையேதான் போட்டி என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கூறியுள்ளார். பொள்ளாச்சியை அடுத்த நெகமத்தில், திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆதரித்து வாக்கு சேகரித்த அவர், மத்தியில் பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் பாஜகவை எப்படியாவது இரண்டாம் இடத்துக்கு கொண்டு வந்துவிடலாம் என்ற முனைப்பில் இருக்கிறார்கள் என்றும், இரண்டாவது இடத்திற்காகத்தான் அதிமுகவிற்கும் பாஜகவுக்கும் போட்டி என்றும் அவர் கூறினார். தேர்தல் களத்தில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி என்றும், பாஜக ஆட்டத்திலேயே இல்லை எனும் கூறினார்.