கியூபா நாட்டு தலைநகர் ஹவானா நகரத்தில் நடைபெற்ற பழங்கால கார்களின் அணிவகுப்பை அப்பகுதி மக்கள் கண்டுகளித்தனர். 100 ஆண்டுகள் பழமையான கார்களும், வரலாற்று சிறப்புமிக்க கார்களும் இந்த அணிவகுப்பில் கலந்துகொண்டு, ஹவானா சாலைகளை அலங்கரித்தன. அமெரிக்காவில் அருங்காட்சியகத்தில் மட்டுமே காணப்படும் இந்த கார்களில், இங்கு கியூபாவில் நீங்கள் பயணிக்கமுடியும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.