ஒரு நாட்டையே சுடுகாடாக்கி வரும் `கும்பல்’.. வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்..
கரீபியன் தீவு நாடான ஹைத்தியில், வன்முறைக் கும்பலின் அட்டகாசத்தை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹைத்தியில் பல முக்கிய பகுதிகளை ஆயுதம்தாங்கிய வன்முறைக் கும்பல் கைப்பற்றியுள்ளது. பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டு வரும் அக்கும்பல், பலரை வீடுகளைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளது.
வன்முறை கும்பலை ஒடுக்க அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டி நடந்த போராட்டத்தில் ஏராளமான மக்கள் பதாகைகளை ஏந்தியபடி முழக்கம் எழுப்பினர்.