இதே நிலை நீடித்தால்.. ஈரான் தலைநகர் வாழ தகுதியற்றதாகி விடும்

Update: 2025-11-15 09:34 GMT

ஈரானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால், பொதுமக்கள் மழை வேண்டி மசூதியில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். ஈரான் தலைநர் டெஹ்ரானில் உள்ள பிரசித்தி பெற்ற சலே மசூதியில் நடைபெற்ற இந்தத் தொழுகையில் பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று மனமுருகி வழிபட்டனர். சுமார் 1 கோடி பேர் வாழும் டெஹ்ரானில் குடிநீர் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்தால், மக்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும் என அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், வரும் டிசம்பருக்குள் மழை பெய்யவில்லை என்றால், பொதுமக்கள் தண்ணீர் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு விதிக்க நேரிடும் என ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் (Masoud Pezeshkian) தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்