உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 11 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏறத்தாழ 30 லட்சம் பேர் வசிக்கும் கீவ் நகரில் இரவுநேரத்தில் ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தியது. உயரமான கட்டடம், பள்ளிக்கூடம், மருத்துவமனையைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், கர்ப்பிணி உள்ளிட்ட 11 பேர் காயமடைந்ததாகவும், அதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகம் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.