ஸ்வீடனின் அடையாளமாக திகழும் 113 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தை வேறு இடத்தில் வைப்பதற்காக அலேக்காக தூக்கிச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. 600 டன் எடை கொண்ட இந்த தேவாலயத்தை அதன் அஸ்திவாரத்தில் இருந்து பிரித்தெடுத்த தொழிலாளர்கள் , அதனை மெதுவாக வேறொரு புதிய இடத்திற்கு எடுத்துச் சென்றனர். உலகின் மிகப்பெரிய நிலத்தடி இரும்புத் தாது சுரங்கத்தின் விரிவாக்கத்தால் இந்த தேவாலய கட்டிடம் பாதிக்கப்பட கூடும் என்று அஞ்சப்பட்டதால் முன்னெச்சரிக்கையை நடவடிக்கையாக அதனை வேறு இடத்திற்கு மாற்றும் பணியானது நடைபெற்று வருகிறது.