இலங்கையில் நிலவி வரும் கடுமையான வானிலையால் கடந்த 10 நாட்களில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதிலிருந்து காப்பாற்றப்பட்ட மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது நீடித்து கொண்டிருக்கும் சீரற்ற வானிலையின் பாதிப்பில் சிக்கி 14 பேர் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.