Russia Ukraine War | குறி வைத்து அடிக்கும் ரஷ்யா.. வெடித்து சிதறிய கப்பல் - உறைய வைக்கும் காட்சி
ரஷ்ய தாக்குதலில் பற்றி எரிந்த துருக்கி கப்பல்கள்
உக்ரைனின் ஒடேசா நகரில் உள்ள செர்னோமோர்ஸ்க் (Chornomorsk) துறைமுகம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், துருக்கிக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் தீ பிடித்து எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். வணிக பயன்பாட்டு கப்பல் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த ரஷ்யா விரும்பவில்லை என்பதையே இந்த தாக்குதல் நிரூபித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.