Russia Vs Germany | உள்ளே நுழைந்த ரஷ்யாவை முடித்து கட்ட ஜெர்மனி எடுத்த அதிர்ச்சி முடிவு
பால்டிக் கடல் பகுதிக்குமேல் வான்வெளியில் ரஷ்ய உளவு விமானம் அத்துமீறி பறந்ததாக கூறப்படும் நிலையில், அதை இடைமறித்து தாக்கி அழிக்க ஜெர்மனி தனது ஜெட் விமானங்களை நிலைநிறுத்தியுள்ளது.
பால்டிக் கடற்கரையைக் கொண்டுள்ள ஜெர்மனியின் வான்வெளியில் ரஷ்யாவின் உளவு விமானம் பறந்ததாக நேட்டோ அதிவிரைவுப்படை தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அதனை இடைமறித்து தாக்கி அழிக்க இரண்டு யூரோஃபைட்டர் ஜெட் விமானங்களை ஜெர்மனி நிலைநிறுத்தியுள்ளது.
3 ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறி, தங்கள் நாட்டு வான்வெளியில் நுழைந்ததாக எஸ்டோனியா கூறிய நிலையில், அதுகுறித்து வடக்கு அட்லாண்டிக் கவுன்சில் கூட்டத்தை செவ்வாய்கிழமையன்று கூட்டி விவாதிக்க நேட்டோ தயாராகி வரும் நிலையில், ரஷ்ய உளவு விமானம் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.