Ring of Fire உலகையே கதறவிட்ட வீடியோ - மரணத்தை கண்முன் காட்டிய இயற்கை - நடுங்கிய "ரிங் ஆஃப் ஃபயர்"
உலகையே கதறவிட்ட வீடியோ - மரணத்தை கண்முன் காட்டிய இயற்கை - நடுங்கிய "ரிங் ஆஃப் ஃபயர்"பசிபிக் "ரிங் ஆஃப் ஃபயர்" பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் அடிக்கடி நிலநடுக்கத்திற்கு ஆளாகுவதுண்டு..பிலிப்பைன்ஸின் செபு தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஐக் கடந்திருப்பது வேதனை தரும் செய்தியாகியுள்ளது.இடிபாடுகளிலில் இருந்து மீட்கப்பட்ட சடலங்களைக் கண்டு உறவுகள் கண்ணீர் விட்டு கதறும் காட்சிகள் காண்போரை கலங்கச் செய்கிறது.இந்த நிலநடுக்கத்தில் 150 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.இன்னொரு புறம் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பாக சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் நில அதிர்வுகளால் அதிர்ச்சியில் அதிர்ந்து போய் தடுமாறிய காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.சமீப ஆண்டுகளாக தொடர்ச்சியாக நிலநடுக்கத்திற்கு ஆளாகி வரும் பிலிப்பைன்ஸில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஐந்து பேர், 2023ம் ஆண்டு ஒருவர் உயிரிழந்த நிலையில், இம்முறை உயிரிழப்புகள் அதிகம் பதிவாகியுள்ள நிலையில், இன்னும் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகாததால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.