ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் பராமரிப்பு மையத்திலிருந்து திறந்து விடப்பட்ட சிவப்பு நண்டுகள் சாலையைக் கடந்து கடலை நோக்கி படையெடுத்தன. இனப்பெருக்கத்துக்காக சிவப்பு நிற நண்டுகளை பராமரிப்பு மைய ஊழியர்கள் திறந்துவிட்டனர். இதனால் ஆயிரக்கணக்கான நண்டுகள் சாலையைக் கடந்து கடலை நோக்கிச் சென்றன. முன்னதாக நண்டுகள் சாலையை ஆக்கிரமித்ததால், அவ்வழியாக சென்ற வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன.