Poland | "Iron Defender" போர் பயிற்சி - போலந்து பாதுகாப்புக்காக களமிறங்கிய நேட்டோ படை

Update: 2025-09-18 09:18 GMT

போலந்தில் நேட்டோ படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், போலந்து ராணுவத்துடன் இணைந்து போர் பயிற்சியில் பங்கேற்றன.

19 ரஷ்ய ட்ரோன்கள் தங்கள் நாட்டின் வான்வெளிக்குள் நுழைந்ததாக போலந்து அதிகாரிகள் கூறிய நிலையில், நேட்டோ படைகளை தங்கள் நாட்டில் நிலைநிறுத்த அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் போலந்து அதிபர் கரோல் நவ்ரோக்கி Karol Nawrocki அண்மையில் கையெழுத்திட்டார். பெலாரசில், அயர்ன் கேட் என்ற பெயரில் ரஷ்யா-பெலாரஸ் கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொண்ட நிலையில், கிழக்கிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டால், போலந்தைப் பாதுகாக்கும் வகையில், அயர்ன் டிஃபென்டர் Iron Defender என்ற பெயரில் போர் பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக போலந்து ராணுவம் தெரிவித்துள்ளது. பீரங்கிகள், ஜெட் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பயிற்சிகளில் போலந்து ராணுவத்துடன், நேட்டோ படைகளும் பங்கேற்றன.

Tags:    

மேலும் செய்திகள்