பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் சவுதி அரேபியாவில் நடந்த 'ரியாத் ஃபோரம்' மாநாட்டில், பலுசிஸ்தானைச் சேர்ந்த மக்களை, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாகக் கருதாமல் தனித்தனியே சல்மான் கான் பேசியதாக பாகிஸ்தானில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், பாகிஸ்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.