பாகிஸ்தானில் ஒலித்த 'ஜன கன மன'
பாகிஸ்தானில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், ஆஸ்திரேலிய தேசிய கீதத்திற்கு பதிலாக, இந்திய தேசிய கீதம் தவறுதலாக ஒலிபரப்பப்பட்டது. பாடல் ஒலித்ததும் மைதானத்தில் கூடி இருந்த ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கு முன்பாக, மைதானத்தில் இந்திய தேசிய கொடி இல்லாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியதால் அதன்பிறகு, போட்டிகள் தோடங்கியபோது வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.