``குற்றவாளி..'' இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை... கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டுள்ளது. இம்ரான் கான் மீது பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், தற்போது பிரிட்டனில் இருந்து பாகிஸ்தான் அரசுக்கு வரவேண்டிய பணத்தை தனிநபர் அறக்கட்டளையில் வரவு வைப்பதற்காக பல ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதுவரை நான்கு வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.