மெக்சிகோ நாட்டில் உள்ள சான் பெட்ரோ நகரின் மேயர் முதலையை திருமணம் செய்துகொண்ட வினோத சடங்கு நடைபெற்றது. சான் பெட்ரோ நகர நிர்வாகிகள் முதலையை திருமணம் செய்துகொள்ளும் நடைமுறை நூற்றாண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடிக்கப்படுகிறது. மக்களுக்கு செல்வம் மற்றும் வளத்தைக் கொண்டு வர பழங்குடியின மரபில் இந்த சடங்கு பின்பற்றப்படும் நிலையில், அலங்கரிக்கப்பட்டு இருந்த முதலைக்கு முத்தமிட்டு மேயர் Daniel Gutierrez திருமணம் செய்துகொண்டார்.