Madagascar | நாட்டை விட்டு ஓடிய அதிபர்.. அமலுக்கு வந்த ராணுவ ஆட்சி - உச்சகட்ட பரபரப்பு
மடகாஸ்கர் நாட்டில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது. ஊழல், வறுமை, தண்ணீர், மின்சாரம் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அந்நாட்டு அதிபர் ரஜோலினா நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார். இந்நிலையில், புதிய இராணுவத் தலைவர் கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா, ராணுவ ஆட்சியை கைப்பற்றியதாக அறிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.