``பிரெஞ்சு நாடாளுமன்றத்திலேயே இப்படியா?’’ சட்டென ஒருநொடி அண்ணாந்து பார்த்த அவை
France Parliment | ``பிரெஞ்சு நாடாளுமன்றத்திலேயே இப்படியா?’’ சட்டென ஒருநொடி அண்ணாந்து பார்த்த அவை
பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் மழைநீர் கசிவு
பிரான்சின் தலைநகரான பாரிஸில் தற்போது பலத்த சூறாவளி காற்றுடன் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதுவரை மழைக்கு இருவர் உயிரிழந்த நிலையில், ஆங்காங்கே மரங்கள் சரிந்து விழுந்ததால் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் சூழல் குறித்து பிரஞ்சு நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, சபைக்குள் மழைநீர் கசிந்ததால் சிறிது நேரம் நாடாளுமன்ற அமர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.