ஈராக் நாட்டின் தெற்கு பாஸ்ராவில் உள்ள ருமைலா எண்ணெய் வயலில் தீ கொளுந்து விட்டு எரிந்தது... தொழில்நுட்ப காரணங்களல் எண்ணெய் வயலின் 5வது எரிவாயு நிலையத்தின் உள்ளே சேமிப்புத் தொட்டியில் தீப்பற்றி எரியத் துவங்கியதாகவும், விரைவில் அணைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் சரிபார்த்து சேதங்களை மதிப்பீடு செய்த பிறகு மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் இல்லாத நிலையில், தொழிலாளர்கள் இருவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.