பற்றி எரிந்த ஈராக்.. கொத்து கொத்தாக மரணம்

Update: 2025-07-18 02:13 GMT

ஈராக் ஷாப்பிங் மாலில் தீ விபத்து - 69 பேர் பலி

செவ்வாயன்று இரவு ஈராக் ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்தில் 69 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அல்-குட் நகரில் உள்ள 5 மாடிகள் கொண்ட இந்த ஷாப்பிங் மாலில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பதற்கான காரணம் இன்னும் தெரிய வராத நிலையில், இந்த விபத்தில் 11 பேர் மாயமாகி உள்ளதாகவும், பலர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் 48 மணி நேரத்தில் இந்த விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியிடப்படும் என்று அம்மாகாணத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்