நெருங்கும் அபாயம்.. பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

Update: 2025-08-26 02:43 GMT

பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள அபாய எச்சரிக்கை

பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கைலாஷ் மலைத்தொடரில் உற்பத்தியாகும் தாவி நதி, ஜம்மு- காஷ்மீர் வழியாக பாய்ந்தோடி, பாகிஸ்தானில் நுழைகிறது. கடந்த சில தினங்களாக கைலாஷ் மலைத்தொடரில் பெய்துவரும் கனமழை காரணமாக தாவி நதியின் நீர்பிடிப்பு பகுதியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பாகிஸ்தானில் தாழ்வான பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்குப் பின்னர், பாகிஸ்தானை இந்தியா அதிகாரபூர்வமாக தொடர்புகொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்