ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவின் நியாயமான செயல்பாடுகள் குறித்து உலக நாடுகளுக்குத் தெரிவிக்க, அனைத்து கட்சிகளைக் கொண்ட எம்.பி.க்கள் குழுவினர், பல்வேறு உலக நாடுகளுக்குச் சென்றுள்ளனர். அவர்களில் பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழுவினர், லண்டனில் உள்ள அம்பேத்கர் அருங்காட்சியகத்திற்குச் சென்று, அவருடைய உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அந்தக் குழுவில் அதிமுக எம்.பி. தம்பிதுரை உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பின்னர் , செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரவிசங்கர் பிரசாத், அம்பேத்கர் லண்டனில் 2 ஆண்டுகள் வாழ்ந்த இல்லத்தை இந்திய அரசு வாங்கி, பராமரித்து வருகிறது என்று தெரிவித்தார்.