பாலஸ்தீனம் நோக்கி கிளம்பிய'கிரெட்டா தன்பெர்க்'
பாலஸ்தீனத்தின் காசா பகுதி வாழ் மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவி பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து கிளம்பிய கப்பலில், கிரேட்டா தன்பெர்க் இணைந்துள்ளார்.பார்சிலோனா கப்பல் துறைமுகத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, காசா புறப்பட்ட படகுகளை வழியனுப்பி வைத்தனர். அப்போது பாலஸ்தீன கொடிகளை கையில் ஏந்தியிருந்த அவர்கள், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். இந்த பயணத்தில் கலந்து கொள்ள வருகை தந்த சூழலியல் போராளி கிரேட்டா தன்பெர்க்கிற்கு, அங்கிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கடந்த ஜூன் மாதம், படகு மூலமாக காசா சென்ற கிரெட்டா தன்பெர்க்கை, இஸ்ரேல் படையினர் தடுத்து நிறுத்தி, அவரை நாடு கடத்தினர் என்பது குறிப்பிட தக்கது.