அமெரிக்காவில் 21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு துப்பாக்கி விற்க கூடாது என அந்நாட்டு அரசு தடை விதித்திருப்பது அரசியலமைப்பிற்கு எதிரானது என பெடரல் நீதிமன்றம் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது. 18 வயது முதல் 20 வயது உட்பட்டவர்களுக்கு துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான அனைத்து உரிமையும் இருப்பதாக கூறிய நீதிமன்றம், இரண்டாவது சட்டத்திருத்தத்தை சுட்டி காட்டியுள்ளது. அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க சில கட்டுப்பாடுகளை கொண்டு வர முன்னர் இருந்த ஜோ பைடன் (Jo Biden) நிர்வாகம் தீவிரம் காட்டிய நிலையில், தற்போது அதற்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.