America | Tesla | Elon Musk | டெஸ்லா எடுத்த திடீர் முடிவு

Update: 2025-10-23 03:12 GMT

பேட்டரிகளில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாக அமெரிக்காவில் 12 ஆயிரத்து 963 வாகனங்களை டெஸ்லா நிறுவனம் திரும்ப பெறுகிறது.

பேட்டரியில் ஏற்பட்டுள்ள மின்சேமிப்பு குறைபாடு காரணமாக, வாகனத்தை ஓட்டும்போது திடீரென திறனை இழக்க வாய்ப்புள்ளதால், 12 ஆயிரத்து 963 அமெரிக்க வாகனங்களை திரும்ப பெற டெஸ்லா முடிவு செய்துள்ளதாக, அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2025 மாடல் 3 மற்றும் 2026 மாடல் Y வாகனங்களில் இந்த பிரச்சினை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்