"பாகிஸ்தான் , இந்தியாவை தொடர்ந்து கண்காணிக்கும் அமெரிக்கா"
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே என்ன நடக்கிறது என்பதை அமெரிக்கா ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போரை தாம் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பலமுறை கூறிவரும் நிலையில், "போர் நிறுத்த ஒப்பந்தங்களில் இருக்கும் சிக்கல்களுள் ஒன்று அவற்றை பராமரிப்பது" என குறிப்பிட்டுள்ள, அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ , தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானை அமெரிக்கா கண்காணித்து வருவதாக கூறியுள்ளார்.