America | ஜான்சன் & ஜான்சன் பவுடரால் கேன்சர் - 966 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு

Update: 2025-10-09 07:02 GMT

புற்றுநோயால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 966 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க ஜான்சன் அண்ட் ஜான்சன் டால்க் பவுடர் நிறுவனத்திற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு கலிபோர்னியாவைச் சேர்ந்த மே மூரின் என்ற பெண்மணி மீசோதெலியோமா என்ற அரிய வகை புற்றுநோயால்,

உயிரிழந்தார். இதற்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் டால்க் பவுடர் தான் காரணம் எனவும், அவற்றில், புற்றுநோயை ஏற்படுத்தும் ஆஸ்பெஸ்டாஸ் இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த பெண்ணிற்கு 966 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்