விண்வெளி சுற்றுலா சென்று வந்த ஆக்ராவில் பிறந்த தொழிலதிபர்

Update: 2025-08-04 04:26 GMT

ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின், புதிய விண்வெளி சுற்றுலாவில் ஆக்ராவில் பிறந்த 80 வயதான ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பயணித்துள்ளார். நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டின் மூலம் அவருடன் சேர்ந்து மேலும் 4 தொழிலதிபர்கள் இந்த விண்வெளிச் சுற்றுலா பயணத்தை மேற்கொண்டுள்ளனர். பூமிக்கும் விண்வெளிக்கும் இடையே பூமியின் வளிமண்டலத்துக்கு அப்பால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஒரு கற்பனை எல்லைக்கோடான "கார்மன் கோடு" வரை சென்று விட்டு, பூமி திரும்பிய இவர்களின் விண்வெளி பயணம் சுமார் 11 நிமிடங்கள் வரை நீடித்தது. ஆக்ராவில் பிறந்த 80 வயதான சாகச பிரியரான அரவிந்தர் 'அர்வி' சிங் பஹால், அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்