40மீ நீளத்திற்கு சாலையில் திடீரென விழுந்த பள்ளம் - உள்ளே விழுந்து நொறுங்கிய 2 லாரிகள்
மெக்சிகோவில் உள்ள குவாடலஜாராவில், சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில், 2 லாரிகள் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அங்குள்ள முக்கிய சாலை ஒன்றில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. 40 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அந்த வழியாக வந்த 2 லாரிகள் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால், அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.