Today Headlines | காலை 9 மணி தலைப்புச்செய்திகள் (21.09.2025) 9 AM Headlines | ThanthiTV

Update: 2025-09-21 04:04 GMT

எச்1பி கட்டணம் 88 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது... ஏற்கனவே எச்1பி விசா பெற்றவர்களுக்கு கட்டண உயர்வு கிடையாது என்றும், புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது...

அமெரிக்காவில் எச்1பி விசாவுக்கு கட்டணம் 88 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டதற்கு இந்தியா கவலை தெரிவித்துள்ளது.... பரஸ்பர நலன்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், அமெரிக்க அதிகாரிகள் விரைவில் சரிசெய்வார்கள் என்று நம்புவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது....

எச்1பி விசா புதிய கட்டுப்பாடு விவகாரத்தில், அமெரிக்காவில் உதவி தேவைப்படும் இந்தியர்களுக்கு உதவி எண்களை இந்திய தூத‌ரகம் அறிவித்துள்ளது... அவசர தேவைக்கு மெரிக்காவில் உள்ள தூதரகத்தை அழைக்கலாம் என்று கூறியுள்ளது...

சென்னை ஈ.சி.ஆர் சாலையில் நடைபெறும் சைக்ளோத்தான் நிகழ்ச்சியையொட்டி, காலை 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது... கோவளம், மகாபலிபுரம் செல்லும் வாகனங்கள் ஓஎம்ஆர் சாலையில் கேளம்பாக்கம் வழியாகவும், சென்னையை நோக்கி வரும் வாகனங்கள் பூஞ்சேரி சந்திப்பில் திருப்போரூர் வழியாகவும் மாற்றப்பட்டுள்ளது...

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தின் எதிரொலியாக ரயில்களில் விற்கப்படும் குடிநீர் பாட்டில்களின் விலை ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது... IRCTC ஆல் விற்பனை செய்யப்படும் இதர நிறுவனங்களின் குடிநீர் பாட்டில்களின் விலையையும் தலா ஒரு ரூபாய் குறைப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது....

ரயிலில் மது அருந்தினால் சட்டரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர்... சக பயணிகளுக்கு தொந்தரவு அளிக்கக் கூடிய எதுவாக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது...

மக்களின் குறைகள், புகார்களை விரைவாக நிவர்த்தி செய்ய சென்னை குடிநீர் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது... பதிவு செய்யப்படும் புகார்கள் ஒருங்கிணைக்கப்பட்ட புவியியல் தகவல் அமைப்பின் மூலம் கணினி வழியாகப் பெறப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது... சென்னையில், நகரின் ஒரு சில இடங்களில் ஒரு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளங்களை நிறுவுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது... இதன் மூலம் 30,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்...

சிப் முதல் ஷிப் வரை அனைத்தையும் இந்தியாவிலேயே உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்... குஜராத் மாநிலம் பாவ் நகரில் நடைபெற்று வரும் கடலிலிருந்து செழிப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் முக்கிய எதிரி பிற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான் எனவும் கூறினார்...

ஆசிரியர்கள் தங்களை அப்கிரேட் செய்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்... மாணவர்களுக்கு சமூக ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தினார்....

Tags:    

மேலும் செய்திகள்