Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (16.01.2026) | 7 PM Headlines | ThanthiTV
- விறுவிறுப்பாக நடைபெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது...திமிறி ஓடிய காளைகளின் திமிலை தழுவி காளையர்கள் அடக்கி பரிசுகளை அள்ளி சென்றனர்...
- பாலமேடு ஜல்லிக்கட்டில், தனது காளையை அடக்கிய வீரரை, அதன் உரிமையாளர் கன்னத்தில் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது...
- உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...திமிறும் காளைகளின் திமிலை தழுவி காளையர்கள் அடக்கி வருகின்றனர்
- பாலமேடு ஜல்லிக்கட்டில் 12 காளைகளை பிடித்த பொந்துகம்பட்டி அஜித் முன்னிலையில் உள்ளார்...பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன், மற்றும் நாமக்கல்லை சேர்ந்த கார்த்தி ஆகியோர் தலா 11 காளைகளை பிடித்து 2வது இடத்தில் உள்ளனர்...
- பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளை ஒன்று பல்வேறு பரிசுகளை தட்டிச்சென்ற நிலையில் உரிமையாளர் அவற்றை உற்சாகமாக பெற்றுச்சென்றார்....
- பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காளை ஒன்று களத்தில் நின்று மாடுபிடி வீரர்களை அலறவிட்டது....
- பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை நடிகர் ஜீவா, சூரி உள்ளிட்டோர் கண்டுரசித்தனர்...அதே போல் நடிகர் அருண் பாண்டியன் தனது மகள் கீர்த்தி பாண்டியன் மற்றும் மருமகன் அசோக் செல்வனுடன் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தார்..
- திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...வாடிவாசலில் இருந்து மின்னல் வேகத்தில் சீறிப்பாயும் காளைகளை, தீரத்துடன் காளையர்கள் அடக்கி வருகின்றனர்...
- நாளை நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது...ஜல்லிக்கட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..
- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி திருவள்ளுவர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்...தமிழ் கலாசாரத்தின் சிறந்த உதாரணமாக திருவள்ளுவர் திகழ்வதாக புகழாரம் சூட்டியுள்ள அவர், திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்..
- காவி உடை அணிந்த வள்ளுவரின் புகைப்படத்தை பகிர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷா, திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்...திருவள்ளுவரின் வாழ்க்கையும், படைப்புகளும் பக்திமிகு வாழ்க்கைக்கும் இணக்கமான சமூகத்திற்கும் வழி வகுத்தன என்று அவர் பதிவிட்டுள்ளார்...
- திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் 4 வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்...வறியோர் எளியோர் வாழ்வுயர மனிதநேயத் திட்டங்கள், இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்...
- திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மலர் மரியாதை செலுத்தினார்...அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன் மற்றும் மேயர் பிரியா உள்ளிட்டோரும் சிலைக்கு மரியாதை செலுத்தினர்...
- திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கெளரவித்தார்...சத்தியவேல் முருகனாருக்கு அய்யன் திருவள்ளுவர் விருதும், வழக்கறிஞர் அருள்மொழி என்பவருக்கு தந்தை பெரியார் விருதும் வழங்கினார்...