ஸ்மார்ட் மீட்டர் அமைக்கும் பணி முடிந்ததும், மாதம் தோறும் மின் கட்டணம் திட்டம் அறிமுகம் செய்யப்படும்... அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் விளக்கம் அளித்தார்...
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது... அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தம் மேலும் வலுப்பெறும் என வானிலை மையம் அறிவித்துள்ளது...
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதன் எதிரொலி... தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் கணித்துள்ளது...
டெல்லியில் தொடர் மழையால் யமுனை ஆற்றின் கரையோரப் பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது.... புரோரி பகுதியில் வயல்பகுதிகளில் சிக்கிய விவசாயிகளை மீட்புக்குழுவினர் மீட்டனர்....
யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் உத்தரப்பிரதேசத்தின் யாகூப்பூர் பகுதி வெள்ளத்தில் தத்தளிக்கிறது... பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் இடம்மாறி வருகின்றனர்....
கனமழை காரணமாக ஹிமாச்சலப் பிரதேசத்தில் 6 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட ஆயிரத்து 311 சாலைகள் மூடப்பட்டன.... ரயில்கள் நிறுத்தப்பட்ட நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது......
ஹிமாச்சல பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் நிலச்சரிவால் கட்டடம் அடியோடு பெயர்ந்து விழுந்தது......கட்டடத்தில் யாரும் வசிக்காததால், நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது....
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வட மாநில தொழிலாளி, குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து பலியானார்... இழப்பீடு கேட்டு சக ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு நிலவியது...
பேச்சுவார்த்தைக்கு சென்ற போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வட மாநிலத்தவர்கள் 110 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.... கல்வீச்சு தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்த நிலையில் 78 பேர் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது......
பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரையின் போது தனது தாய் குறித்து சிலர் அவதூறு பேசினார்கள் என்று பிரதமர் மோடி வேதனையுடன் கூறினார்... தன்னைப் போலவே, பீகாரின் பெண்களுக்கும் இது வலியை தந்திருக்கும் என்றும் பேசியுள்ளார்...
பிரதமரின் தாயார் குறித்து காங்கிரஸ் கட்சியினர் அவதூறாக பேசியதாக கேரளாவில் பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.... தடையை மீறி பேரணி சென்ற பாஜக மகளிர் அணியினரை தண்ணீரைப் பீய்ச்சி அடித்து போலீசார் கலைத்தனர்....
ஜெர்மனி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள NRW மாகாண முதல்வர் ஹென்ரிக்கை சந்தித்தார்.....தமிழ்நாடும் NRW மாகாணமும் முன்னேற்றத்திற்காக ஒன்றாக இணைந்து செயல்பட இருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்....