Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01.10.2025) | 6AM Headlines | ThanthiTV
- கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் என்.ஆனந்த், நிர்மல் குமார், முன்ஜாமின் கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளனர்...
- கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட த.வெ.க நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
- விஜய்யின் கூட்டம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் அவசர கால வழி எதுவும் இல்லை என த.வெ.க தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்...
- தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது...
- கூட்டத்திற்குள் முதலில் வந்த ஆம்புலன்ஸ்கள் தவெகவினர் ஏற்பாடு செய்தது என்று சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் அளித்தார்...
- விஜய் வாகனம் வந்தபோது அதிகமானோர் கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், கூட்டத்தை விளக்கியதாகவும் காவல்துறை அதிகாரி விளக்கம் அளித்தார்...
- கரூர் சம்பவத்தில், விபத்துக்கான காரணத்தை பிறர்மீது சுமத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக தெரிகிறது என அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்...
- கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய், வீடியோ வெளியிட்டு முதல்முறையாக மனம் திறந்துள்ளார்...
- தனது அரசியல் பயணம் தொடரும்... இதோடு முடிந்துவிடாது என்று தவெக தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்...