Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04.12.2025) | 6 PM Headlines | ThanthiTV
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...
வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, கோவை, நெல்லை உட்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு...
சென்னை உட்பட வட மாவட்டங்களில் நாளை முதல் படிப்படியாக மழை விலகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
இரண்டு நாள் அரசு முறை பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று மாலை 6.35 மணிக்கு இந்தியா வருகிறார்... பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து, நாளை காலை 11.50 மணிக்கு பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்... அதிநவீன எஸ்-500 ஏவுகணை அமைப்பை இந்தியாவுடன் இணைந்து தயாரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது... இந்தியா வந்துள்ள ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் ஆண்ட்ரி பெலோசோவ் டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை... மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-கும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்...
திருப்பரங்குன்றம் மலையில் இன்று தீபம் ஏற்ற மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அனுமதி...
திருப்பரங்குன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், தீபம் ஏற்ற அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி...
மாநில அரசு கடமையைச் செய்ய தவறியதாலேயே CISF பாதுகாப்பிற்கு உத்தரவிடப்பட்டதாக மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது...
திருப்பரங்குன்றம் விவகாரத்தில், மத நல்லிணக்கம் என்பது ஒருவரை, ஒன்றும் செய்ய விடாமல் தடுப்பதில் அல்ல....
இரு தரப்பும் இணைந்து, தங்களுக்கானவற்றை செய்து கொள்வதிலும், அனுமதிப்பதிலும் தான் உள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்...
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டதால், சமூக நல்லிணக்கம் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது..
மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அரசு தரப்பில் வாதிடப்பட்டது...
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி அளித்த உத்தரவை, நடைமுறைப்படுத்தாத கோயில் நிர்வாகம் மீது நடவடிக்கை கோரிய மனு...
தீபம் ஏற்ற அனுமதி அளித்த உத்தரவால் தமிழக அரசு பாதிக்கப்படவில்லை, ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்...
சிவகங்கையில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை போலீசார் தடுத்து நிறுத்தினர்...
போலீசாருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...
திருப்பரங்குன்றம் கிரிவல பாதையில் உள்ள தர்கா முன்பு வஜ்ரா வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது...
மலைக்கு செல்லும் பாதையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்...
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்காக இதுவரை 99.71 சதவீத கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..
97.25% படிவங்கள் டிஜிட்டல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது...