முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின்,
புறப்பட்டார்...
சென்னை விமான நிலையத்தில் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.... வாய்ப்புகளை உருவாக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.....
திமுக ஆட்சியில் 10.62 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்... புதிய கட்சிகள் வருகிறதோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் தான் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்....
கருத்துக்கணிப்புகளை மிஞ்சி திமுக அமோக வெற்றி பெறுவது உறுதி என்றும் குறிப்பிட்டார்...
ஜப்பான் நாட்டின் 16 மாகாண ஆளுநர்களை பிரதமர் மோடி சந்தித்தார்... இரு நாட்டு மாநிலங்கள் இடையே ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை
ஜிஎஸ்டி வரி குறைப்பு சாதாரண மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்... மாநிலங்களின் வரி வருவாய்க்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சி நிதி அமைச்சர்களின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது...
"மாநில வருவாயை பாதுகாக்காமல், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பயனளிக்காது" என்று மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்... "ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் மாநில வருவாயை குறைக்கக் கூடாது" என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்...
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெறுகிறது.... சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் தேர்தல் பணிகள், பூத் கமிட்டி பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன...
நெல்லுக்கான ஆதார விலையை 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது... சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு 131 ரூபாயும், சன்ன ரகத்துக்கு 156 ரூபாயும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது...
சென்னை அம்பத்தூரில் டாட்டூ கடையை ரவுடி கும்பல் அடித்து நொறுக்கியது... சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், ரவுடி கும்பல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பைக்கில் இருந்து 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்.... படுகாயம் அடைந்த இளைஞர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்...
ஓசூரில் ஒரே நாளில் தெரு நாய்கள் கடித்ததில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்... புதுக்கோட்டை அருகே வெறிநாய் கடித்து படுகாயம் அடைந்த சிறுமி உள்பட 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...