Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (22.01.2026) | 11 AM Headlines | ThanthiTV

Update: 2026-01-22 05:53 GMT
  • சென்னையில் கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ஆயிரத்து 720 ரூபாய் குறைந்துள்ளது.....ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது... சென்னையில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த வெள்ளி விலை கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது....ஒரு கிராம் வெள்ளி 340 ரூபாய்க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது...
  • மத்திய அமைச்சரும், பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் காலை உணவு விருந்து அளித்தார்....சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் நடைபெற்ற விருந்தில், தேர்தல் வியூகம், தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவசி குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது..
  • சென்னையில் பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறவுள்ள பொதுக்கூட்டம், தமிழகத்தில் மாற்றத்தை நிகழ்த்தும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்....என்.டி.ஏ. கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு 5 லட்சம் பேர் வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்...
  • சென்னை போரூரில் மீண்டும் ஆட்டோ ரேஸ் தலைதூக்கியுள்ள சம்பவம் பொதுமக்களை அச்சம் அடையச் செய்துள்ளது.....மதுரவாயல் - தாம்பரம் புறவழிச்சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆட்டோ ரேஸ் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது...
  • கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மீண்டும் உறைபனி தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.....மரங்கள், புல்வெளிகள் வெண்பனி போர்த்தி காட்சியளிப்பதோடும், வெப்பநிலையும் 6 டிகிரிக்கும் கீழாக குறைந்துள்ளது...
  • பிரதமர் மோடி ஒரு சிறந்த நண்பர் என்றும், அவர் மீது தனக்கு மிகுந்த மரியாதை உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்...டாவோஸ் மாநாட்டில் பேசிய அவர், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார்...
  • புதுச்சேரியில் முதியோர் உதவித்தொகை 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 55 முதல் 60 வயது வரை உள்ள முதியவர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும், 60 முதல் 79 வயது வரை உள்ளவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும், 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 4 ஆயிரம் ரூபாயும் உதவித்தொகை வழங்கபட உள்ளன. இதேபோல் விதவை மகளின் திருமண நிதி உதவியானது 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரமாக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்