Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27.12.2025) | 1PM Headlines | ThanthiTV

Update: 2025-12-27 08:02 GMT
  • வெள்ளி விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.கிலோவிற்கு 20 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது.
  • ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • S.I.R பணிகளை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்கு சாவடிகளிலும் இன்று வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் மேற்கொள்ளவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது...
  • திருவண்ணாமலையில் மாநில அளவிலான வேளாண் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் கண்காட்சியை முதலமைச்சர் பார்வையிட்டார்.
  • விவசாயிகள்போல் வேடமிட்டு சிலர் மக்களை ஏமாற்றுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவரை மறைமுகமாக விமர்சித்தார்..திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கும் விவசாயத்துக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதாக திருவண்ணாமலை வேளாண் கண்காட்சியில் முதலமைச்சர் பேசினார்.
  • வழி தெரியாமல் நின்ற போது, தனக்கு வழி காட்டியவர் விஜய் தான் என தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உருக்கமாக பேசியுள்ளார்...தன் உடம்பில் ஓடும் ஒவ்வொரு துளி ரத்தமும் விஜய்க்காகத்தான் என்றும் கண் கலங்கியபடி அவர் பேசினார்...
  • சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம் என அன்புமணி கூறியுள்ளார்.ஆன்மிகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்றும் மதுரை விமான நிலையத்தில் அவர் பேட்டி அளித்தார்.
  • சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகம் நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணி சென்றனர்.பாரிமுனை பகுதியில் தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
  • சென்னையில் சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். எழும்பூரில் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்