Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.01.2026) | 1PM Headlines | ThanthiTV
- ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ஒரேநாளில் 1,360 ரூபாய் உயர்ந்துள்ளது....ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 7,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது....
- வெள்ளி விலை கிலோவுக்கு 8 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது.ஒரு கிலோ வெள்ளி 3 லட்சத்து18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.ஜனவரி 31ம் தேதி வரை தேர்தல் ஆணையம் கால அவகாசம் அளித்துள்ளது
- சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முதற்கட்ட சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்தன.1 லட்சத்து 16 ஆயிரம் விவிபேட் (VVPAD)எந்திரங்களில் சோதனை நடந்துள்ளது.
- திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்..சென்னை கோவளம் அருகே மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்த அவர், திமுக ஆட்சியில் நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
- பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் நாளை மறுநாள் தமிழகம் வருகிறார்.வரும் 22ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி உறுதி செய்யப்படும் நிலையில், 23ம் தேதி மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
- சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்தித்துள்ளார்.ஈபிஎஸ் - தனியரசு சந்திப்பு NDA கூட்டணியில் முக்கியத்துவம் பெறுகிறது.
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் மீண்டும் ஆஜர் ஆனார்.முதல் முறை ஆஜரானபோது 7 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், விஜய்யிடம் தற்போது 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது.
- சூழல் மேலும் மோசமாகும் என காவல்துறை கூறியதால் கரூரில் இருந்து வெளியேறியதாக சிபிஐ-யிடம் விஜய் தெரிவித்துள்ளார்...கூட்ட நெரிசலின்போது தவெக தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
- சென்னையில் குடியரசு தினத்தையொட்டி முப்படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.காமராஜர் சாலையில் ஒத்திகையின்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.