கிரிக்கெட்-ல் G.O.A.T? ரெடியான சச்சின், தோனி, கோலி?

Update: 2025-08-01 16:28 GMT

அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி Lionel Messi டிசம்பர் மாதம் இந்தியா வர உள்ளார்.

டிசம்பர் 13 முதல் 15ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மெஸ்ஸி, கொல்கத்தா, மும்பை, டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, டிசம்பர் 14ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டியில் மெஸ்ஸி பங்கேற்க இருப்பதாகவும், அவருடன் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின், தோனி, விராட் கோலி பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் மும்பை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்