"டுர்ர்ர்ர்.. ஓடிட்டேன் ல" - பெட்ரோல் பங்கில் பணம் கொடுக்காமல் தப்பி ஓடிய நபர்கள்
சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பணம் கொடுக்காமல் தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சம்பவத்தன்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் 1500 ரூபாக்கு பெட்ரோல் போட்டு விட்டு, பணம் கொடுக்காமல் தப்பி ஓடியுள்ளனர்.
இது தொடர்பாக பெட்ரோல் பங்க் ஊழியர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.