டிராபிக் போலீசை பீர் பாட்டிலால் குத்த முயற்சி - கதிகலங்க வைத்த இளைஞர்கள்.. சென்னையில் அதிர்ச்சி
சென்னை நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து காவலரை பீர் பாட்டிலால் குத்த முயன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். லயோலா கல்லூரி அருகே விபத்து தொடர்பாக விசாரிக்க வந்த போக்குவரத்து காவலரை 3 பேர் தாக்கினர். போக்குவரத்து காவலரை பீர் பாட்டிலால் குத்தவும் முயன்றனர். இந்த புகாரில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்