பித்தப்பை கல் அகற்றும் அறுவை சிகிச்சையின்போது, தவறாக அறுவை சிகிச்சை செய்ததால் பாதிக்கப்பட்டவருக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, மருத்துவருக்கு தமிழ்நாடு மாநில நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை அண்ணா நகரை சேர்ந்த சாந்தி பிரபுராம் என்பவர் தாக்கல் செய்த வழக்கை மாநில நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா விசாரித்தார். அப்போது, கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர் வெங்கட்ராமன், மனுதாரர் சாந்தி பிரபுராமுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், 25 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவு தொகையும் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.