ஹெல்தியா இருப்பவர்களுக்கே திடீர் ஹார்ட் அட்டாக் ஏன்?வாழை, தக்காளி,உருளையே எமனாகுமா?"
ஹெல்தியா, ஸ்ட்ராங்கா இருப்பவர்களுக்கே திடீர் ஹார்ட் அட்டாக் ஏன்? "நாம் தினமும் சாப்பிடும் வாழை, தக்காளி, உருளையே எமனாகுமா..?" "அமைதியான ஆபத்து" - கொஞ்சம் உஷார்
காய்கறிகள், பழங்கள், கீரைகள் பொதுவா நம் உடலுக்கு ஆரோக்கியமானதுனு நம்பப்படுது. ஆனா சமீப காலங்களில அதிகமா நடக்ககூடிய மாரடைப்பு மரணங்களுக்கு காரணம் பத்தி மருத்துவர்கள் சொல்லியிருக கூடிய ஒரு விஷயம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கு. ரொம்ப சின்ன வயசு ரெகுலரா வாக்கிங் போவாரு. ஜிம்முக்கெல்லாம் கூட போய் ரொம்ப ஆக்டிவா உடற்பயிற்சி செய்வாரு. ஃபிட்னஸ் மேல ரொம்ப கவனமா இருப்பாரு. ஆனா, அவரே திடீர்னு ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாரேனு, அண்மைக்காலமா உங்க சர்கிள்ல பலரும் பேச கேட்டிருப்பீங்க. இந்தமாதிரி திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு என்ன காரணம்னு மிகப்பெரும் விவாதங்கள் நடந்துகிட்டிருக்கு. ஒருசிலர் கோவிட் தடுப்பூசி மேல கூட பழிய போட்றாங்க. அது தனி டாபிக். நிறையமுற பேசிட்டோம். அதெல்லாம் உண்மையில்ல... மக்களோட லைஃப் ஸ்டைல் மாரிடுச்சி. ஹெல்தி ஆன ஃபுட் ஹாபிட்ஸ் இல்லனு சுகாதாரதுறையும் பலமுறை விளக்கத்த கொடுத்துட்டாங்க. அப்ப இப்படி நல்லா இருக்கவங்க திடீர்னு இறந்து போறாங்களே. என்னதான் காரணம்னு மக்கல் மத்தியில சந்தேகமும் கேள்வியும் தொடர்ந்துட்டேதான் இருக்கு. இப்படிப்பட்ட சூழல்லதான் அன்றாட வாழ்க்கையில நாம அதிகமா சாப்பிடக்கூடிய வாழைப்பழம், உருளைக்கிழங்கு, சில வகை கீரைகள், இளநீர் - இதெல்லாம் சிலருக்கு பொட்டாசியத்தின் அளவை ஆபத்தான அளவிற்கு உயர்த்தி, திடீர் இதயப் பிரச்சினையைத் தூண்டிவிடும்னு இந்திய அளவுல புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருக்காங்க. இங்க நாம கவனிக்க வேண்டியது. எல்லோருக்கும் இல்ல. ஒரு சிலருக்கு. அந்த சிலர் யார்..? யாரெல்லாம் உஷாரா இருக்கனும்...