Chennai Trending News | சென்னை மக்களின் பெரும்பாலான சாய்ஸ் எது?

Update: 2025-06-24 06:36 GMT

புறநகர் ஏசி மின்சார ரயில் கட்டணம் அதிகமா?- தெற்கு ரயில்வே விளக்கம்

சென்னை புறநகர் ஏ.சி. மின்சார ரயிலில், பயண கட்டணம் அதிகம் என்பதால் பொதுமக்கள் பயணம் செய்ய விரும்புவதில்லை என்ற தகவல் தவறானது என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. மெட்ரோ ரயிலுடன் ஒப்பிடுகையில், சென்னை புறநகர் ஏசி மின்சார ரயில் கட்டணம் கூடுதலாக இருப்பதால் பயணிகள் மத்தியில் ஆர்வம் குறைந்து இருப்பதாகவும், பெரும்பாலான நேரங்களில் 50 முதல் 60 சதவீதம் இருக்கைகள் காலியாக இருப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே, மெட்ரோ ரயில் மற்றும் ஏசி பேருந்துகளுடன் ஒப்பிடுகையில் ஏசி புறநகர் மின்சார ரயிலின் கட்டணம் சற்றே கூடுதலாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்