``காவலர்களுக்கு வார விடுப்பு ..மீறினால் ...''நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

Update: 2025-04-24 03:36 GMT

தமிழக அரசின் உத்தரவுபடி காவலர்களுக்கு வார விடுப்பு வழங்க உத்தரவிட கோரி மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக முதல்வர் பிறப்பித்த உத்தரவை முறையாக அதிகாரிகள் நிறைவேற்றாதது ஏன் ? என கேள்வி எழுப்பிய நீதிபதி, காவலர்களுக்கு வார விடுப்பு வழங்க தவறினால் காவலர்கள் நேரடியாக நீதிமன்றத்தை அணுகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்று கூறினார்.

மேலும், வார விடுப்பு வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என குறிப்பிட்டு வழக்கை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்