தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அதிக வருவாய் ஈட்டி சாதனை
திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 2024-ம் ஆண்டில் அதிக வருவாய் ஈட்டி மாபெரும் சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 2023ம் ஆண்டில் ஒன்று புள்ளி ஒன்று ஏழு மில்லியனாக அதிகரித்துள்ளது.
கடந்த 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு தொண்டாற்றி வருவதாகவும்,
கீழடி அருங்காட்சியகம் அமைத்ததுடன், மதுரை அலங்காநல்லூர் அருகே பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் உருவாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிமுனையில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை இணைத்து கடலலைகள் நடுவிலே கண்ணாடி இழைக் கடல்பாலத்தைக் கட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் அருவிப் பகுதிகளை 17 கோடியே 58 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தி முதலமைச்சர் கடந்த ஆண்டு திறந்து வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கடந்த ஆண்டுகளை விட 2024-ம் ஆண்டில் 28 கோடியே 69 லட்சம் ரூபாய் அதிக வருவாய் ஈட்டி மாபெரும் சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்பெறும் 26 ஓட்டல்கள் மூலமாகவும், அனைத்து சுற்றுலாக்களையும் ஆன்லைனில் பதிவு செய்யும் சேவைகள் காரணமாகவும் 2021 மே முதல் 2025 ஜனவரி வரை 129 கோடியே 28 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கிடும் ஊக்கத்தால் திராவிட மாடல் அரசின் சுற்றுலாத்துறை இந்தியாவின் மிகச்சிறந்த சுற்றுலாத் துறையாகப் புகழ் பெருக்கிப் பாராட்டப்படுவதாக கூறப்பட்டுள்ளது