100 அடி உயரத்திற்கு நெருப்பை கக்கிய எரிமலை..மிரள வைக்கும் படுபயங்கர காட்சி
மீண்டும் வெடித்து சீற்றத்துடன் காணப்படும் கிலாவியா எரிமலை
அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலாவியா KILAUEA எரிமலை மீண்டும் வெடித்து சிதறியது.
உலகிலேயே அதிக சீற்றம் கொண்ட எரிமலைகளில் ஒன்றாக கிலாவியா எரிமலை கருதப்படுகிறது. இந்த எரிமலை அண்மைக்காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறி வருகிறது. இந்நிலையில், இந்த எரிமலையில் இருந்து சுமார் 100 அடி உயரத்திற்கு தீக்குழம்பு வெளியேறிய காட்சிகளை, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.