பல நாளாக வெளியே தெரியாமல் பள்ளியில் நடந்த அத்துமீறல்!விழிப்புணர்வு முகாமில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை

Update: 2025-01-21 07:15 GMT

                  பல நாளாக வெளியே தெரியாமல் பள்ளியில் நடந்த அத்துமீறல்!விழிப்புணர்வு முகாமில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை

  •  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய, அலுவலக உதவியாளர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
  • மல்லாங்கிணரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
  • சில நாட்களுக்கு முன் இந்த பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
  • அதில் பாலியல் சீண்டல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
  • அப்போது இரண்டு மாணவிகள், விழிப்புணர்வு முகாம் நடத்திய அலுவலர்களிடம் புகார் தெரிவித்தனர்.
  • அதில் பள்ளியில் பணியாற்றும் அலுவலக உதவியாளர் ராஜமாணிக்கம், தொடர்ந்து ஆபாச படங்களை காட்டியதாக, கூறியுள்ளனர்.
  • இதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு குழு, அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
  • இதையடுத்து, ராஜமாணிக்கம்,போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்