அரசுப் பள்ளி மாணவியின் மிரட்டல் சாதனை... குவியும் பாராட்டு

Update: 2024-12-20 09:04 GMT

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆயிரத்து 330 திருக்குறளையும் பயன்படுத்தி திருவள்ளுவரை தத்ரூபமாக வரைந்த மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேல்கலவாய் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருபவர் பிரதிக்‌ஷா. இவர் ஃபெஞ்சல் புயல் காரணமாக கிடைத்த விடுமுறையை ஓவியம் வரைய பயன்படுத்திக்கொண்டார். திருவள்ளுவரை தத்ரூபமாக வரைந்த அவர், அந்த ஓவியத்தில் ஆயிரத்து 330 திருக்குறளும் இருக்கும் படி பார்த்துக்கொண்டார். மாணவியின் இந்த முயற்சிக்கு தலைமை ஆசிரியர் உள்ளிட்ட சக ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்